Jump to content


Photo

முகமூடி விமர்சனம்


 • This topic is locked This topic is locked
11 replies to this topic

#1 -={ Super Star }=

-={ Super Star }=
 • VIP
 • 6,026 posts

Posted 31 August 2012 - 09:50 PM

முகமூடி விமர்சனம்

முகமூடி.. தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது ஹீரோக்கள் மாஸ் ஹீரோக்களாக வந்து போனாலும் நிரந்தரமாக ஒரு சூப்பர் ஹீரோ என்று இதுவரை யாரும் இருந்தது இல்லை.. நம்முடைய அந்த ஏக்கத்தை போக்க வந்து இருப்பதே இந்த முகமூடி...

தன்னுடய முந்
தைய படங்களில் குழந்தைகள் கடத்தல் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற கதை கருக்களை எடுத்து கொண்ட மிஷ்கின் இந்த முறை எடுத்து கொண்டு இருப்பது வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களை பற்றியது..

ஹீரோ ஜீவா.. ஒரு சூப்பர் ஹீரோவுக்குண்டான உடலமைப்போடு கெத்தாக இருக்கிறார்.. அவருடைய உடை வடிவமைப்பும் கட்சிதமாக உள்ளது.. குங்பு சண்டைக்காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.. வீட்டில் அப்பா திட்டும் போது கண்டுக்காமல் இருப்பதும்.. நாயகி முன்னிலையில் அதே அப்பா திட்டும் போது அவர் காட்டும் முகபாவங்களும் நன்று.. அவருடைய குங்பு மாஸ்டருக்காக மார்க்கெட்டில் சண்டை போடுவதாகட்டும்.. நாயகியை கவர வேஷம் போடுவதாகட்டும்.. ஜீவா தனது கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார்..

கதாநாயகியாக புதுமுகம் பூஜா ஹெக்டே நாசரின் மகளாக வருகிறார்... முதல் காட்சியிலேயே ஜீவாவை போலீசில் பிடித்து கொடுப்பது.. வாழை பழத்தோலை வீதியில் எறிந்தவரின் காரிலேயே மீண்டும் கொண்டு போடுவது.. முகமூடியில் இருக்கும் ஜீவாவை ஒருதலையாய் காதலிப்பது.. என்று தன்னுடைய வேலையே ஒழுங்காக பார்த்திருக்கிறார்..

வடநாட்டில் கொள்ளை அடித்து சிக்காத புத்திசாலி கொள்ளையர்களை பிடிக்கும் போலிசாக நாசர்.... ரொம்ப நாளைக்கு பிறகு கிரீஷ் கர்னாட் ஜீவாவின் தாத்தாவாக.. மற்றும் செல்வா கோல்மால் கிழக்கு வீதி போன்ற படங்களில் நடித்தவர் ஜீவாவுக்கு மாஸ்டராக நடித்திருக்கிறார்.. ரொம்ப நாளைக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியான ஒரு கதாபாத்திரம் அவருக்கு..

வில்லனாக 'அஞ்சாதே' நரேன்... குங் பு கற்று கொடுத்து கொள்ளை அடிக்கும் கொள்ளை கூட்டத் தலைவன்.. வில்லனாக அவருக்கு இது ஒரு நல்ல அறிமுகம்.. அவர் போடும் திட்டங்கள் ஜீவாவினால் முறியடிக்கபடுவதும் அவர் ஜீவா மேல் கொலைவெறி ஆவதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. இறுதி வரை போராடி சாகும் தருவாயில் கூட கௌவரத்தை விட்டு கொடுக்காமல் செத்து போகிறார்..

வழக்கமான மிஷ்கின் படங்களில் உள்ளது போலவே இதிலும் சில காட்சிகள் உள்ளன.. முக்கியமாக சரக்கு பாட்டு.. காலுக்கு கீழே காமெரா.. வயலின் பின்னணி.. போன்றவை..

இசை கே .. வாயமுடி சும்மா இரு டா.. மற்றும் BAR ANTHEM ரெண்டு பாடல்களும் நல்ல ஒளிப்பதிவு மற்றும் இசையினால் அழகாக உள்ளது.. பின்னணி இசையிலும் ஒரு ACTION THRILLER க்கு உண்டான இசை நன்றாக உள்ளது..

இடைவேளைக்கு முன் வரும் அந்த 10 நிமிடங்கள் மற்றும் CLIMAX க்கு முந்தைய 10 நிமிடங்களில் படம் விறுவிறுப்பு அடைகிறது..

குழந்தைகள் கண்டிப்பாக ரசிப்பார்கள்..

குறைன்னு சொல்லனும்னா நாசரை சுட்டது ஜீவான்னு நினைத்த போலீஸ் அவர மேற்கொண்டு தேட எந்த முயற்சியும் எடுக்காம போனது.. பிறகு ஏற்கனவே பார்த்த BATMAN படங்களின் சாயல் சில இடங்களில் தெரியுது.. இருந்தாலும் இந்த தமிழ் நாட்டு முகமூடியை தாரளமாக நாமும் அணிந்து கொள்ளலாம்..


 • 1

#2 Ⓣ.Ⓢ

Ⓣ.Ⓢ
 • Team Rockers
 • 2,830 posts

Posted 31 August 2012 - 09:52 PM

haha :Thanks:
 • 0

#3 Invisible

Invisible

  Super Star Rasigan

 • VIP
 • 1,085 posts

Posted 31 August 2012 - 09:54 PM

:Thanks:
 • 0

#4 ***>THERI<***

***>THERI<***

  *-_-* Tamil Paiyan *-_-*

 • VIP
 • 3,894 posts

Posted 31 August 2012 - 09:54 PM

Padam Super Boss... :) :sign0008:
 • 0