Jump to content


Photo

தமிழர்களை அவமானப்படுத்திய கார்த்தி


  • This topic is locked This topic is locked
5 replies to this topic

#1 {~KaVaLaN~}

{~KaVaLaN~}
  • VIP
  • 1,412 posts

Posted 27 November 2011 - 09:53 PM

தெலுங்கு ரசிகர்களை தான் பிடிக்கும் -
தமிழர்களை அவமானப்படுத்திய கார்த்தி


தமிழில் உள்ள அதே அளவு தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்கள் சிலர் இருக்கிறார்கள். ரஜினி, கமலுக்கு பிறகு தமிழில் உள்ள அதே அளவு வரவேற்பு விக்ரம், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுக்கு தெலுங்கிலும் உண்டு.

... கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல இந்த மூன்று படங்களையும் யுகானிக்கி ஒக்கடு, ஆவாரா, நா பேரு சிவா என்ற தலைப்புகளில் தெலுங்கிலும் வெளியாகி அதே அளவு வரவேற்பு பெற்றது. தமிழில் உள்ள அதே அளவு மார்க்கெட் தெலுங்கிலும் இருப்பதால் சூர்யா, கார்த்தியின் எல்லாப் படங்களும் தெலுங்கிலும் டப்பிங் செய்து ரீலிஸ் செய்யப்படும்.

கார்த்தியின் சமீபத்திய வெற்றிப் படமான சிறுத்தை தெலுங்கு படம் விக்ரமாகுடு என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சமீபத்திய தெலுங்கு சினிமா நிகழ்ச்சியில் கார்த்தியிடம் உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் இஷ்டமா? தெலுங்கு ரசிகர்கள் இஷ்டமா? என்ற கேள்வி கேட்கப்பட, ஒரு நொடி கூட யோசிக்காமல் ‘கண்டிப்பா தெலுங்கு ரசிகர்கள் தான்...’ என்று சொல்லி அந்த அரங்கத்தில் இருந்த தமிழர்களுக்கு அவமானத்தை தேடித் தந்துள்ளார் கார்த்தி.

அதற்கு கார்த்தி சொல்லும் காரணம் தான் வினோதமாக உள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மாதிரி தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் கைத்தட்டுவதில்லையாம். திரையரங்கில் கைத்தட்டி உற்சாகப்படுத்துவது தெலுங்கு ரசிகர்கள் தானாம். என்ன ஒரு வேடிக்கை!

இப்போது வரிசையாக ஹிட் கொடுத்து வந்தாலும், பருத்திவீரன் இல்லை என்றால் கார்த்தி இந்த நிலையை அடைந்திருப்பாரா என்பது பெரிய கேள்விக்குறி. பருத்திவீரனால் உலகப்புகழ் அடைந்தார் கார்த்தி. எப்போதும் மேடையில் ‘என்ன மாமா சௌக்கியமா...’ என்று அவர் பேசும் போது வரும் கைத்தட்டல், அவர் பருத்திவீரனுக்கு பிறகு நடித்த படங்களில் கூட கிடைக்கவில்லை என்பது தான் நிஜம்.

கலைக்கு எல்லைகள் இல்லை, உண்மைதான். ஆனால் ஏற்றிவிட்ட தமிழ் இதயங்களை மறந்துவிட்டு, எங்கோ இருக்கும் தெலுங்கு ரசிகர்கள் தான் எனக்கு வேண்டும் என்று கார்த்தி சொன்னால் இது வாய்க்கொழுப்பே தவிர வேற ஒன்றும் இல்லை.

இதே போல் ஒரு தெலுங்கு நடிகன் தமிழ்நாட்டுக்கு வந்து, எனக்கு தெலுங்கு ரசிகர்களைவிட தமிழ் ரசிகர்கள் தான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டு ஆந்திராவுக்குள் காலடி எடுத்துவைக்க முடியா என்பதே கேள்வி?

தெலுங்கு நடிகர் ஒரு தமிழரை புகழ்ந்ததற்காக... பல்லை உடைப்பேன்! என்று இன்னொரு நடிகர் எச்சரித்தது நினைவில் இருக்குமே!



Edited by {~KaVaLaN~} , 27 November 2011 - 10:04 PM.

  • 0

#2 Guest_infant_*

Guest_infant_*
  • Guests

Posted 27 November 2011 - 10:09 PM

kaathi film a ban pannanum tamilnadu fulla

#3 ♛TamilRockers King♛

♛TamilRockers King♛

    Vijay Rasigan

  • VIP
  • 772 posts

Posted 27 November 2011 - 10:11 PM

vantha udanaye mokka poda aarampichudaan :Thanks:
  • 0

#4 Gangster

Gangster

    TR... Gangster

  • VIP
  • 244 posts

Posted 28 November 2011 - 08:33 AM

Naanum Paathan Pa Andahe Video Clip Maanaketavan :Thanks:

Elaeeeee En Vayiru Pathi Eriudhulaeeeee

  • 0